7 C
France
April 25, 2024
france-president
செய்திகள்

‘நாம் இப்போது போரிலிருக்கிறோம்’ – பிரெஞ்சு அதிபர் நாட்டு மக்களுக்கு உரை

பிரான்சில் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பலதரப்பட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும் அதன் பாதிப்பு குறையவில்லை. நோய்தொற்றின் மூன்றாம் நிலையினை அடைந்துள்ள நிலையில் பிரான்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் திங்கள்கிழமை (16/03/2020) இரவு எட்டு மணியளவில் தொலைக்காட்சியில் மக்களுக்கு உரையாற்றினார். இவ்வுரை சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றது. அவர் உரையிலிருந்து சில பகுதிகள் :

”இரண்டு நாட்களுக்கு முன்பு பிரெஞ்சு பிரதமர் எட்வார்ட் பிலிப் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு இணங்காமல் உண்மையில் ஒன்றுமே மாறாததைப் போல பூங்காக்கள், நெரிசலான சந்தைகள், உணவகங்கள், மதுக்கடைகளில் சனிக்கிழமையன்று மக்கள் கூடியிருப்பதை நாங்கள் கண்டோம். நீங்கள் உங்களைப் பாதுகாத்துக்கொள்ளாததோடு மட்டுமல்லாமல், மற்றவர்களையும் பாதுகாக்கவில்லை. உங்கள் அன்புக்குரியவர்களின் நலனுக்கும் நீங்கள் ஆபத்தை விளைவிக்கும் அபாயம் உள்ளது” என்றார்.

”எனவே, இதையெல்லாம் கருத்தில் கொண்டு சில முடிவுகளை எடுக்கவேண்டியுள்ளது. இந்த நெருக்கடியான காலக்கட்டத்தின் தொடக்கத்திலிருந்து செயல்பட்டு வரும் அறிவியல் குழுவைக் கலந்தாலோசித்த பின்னர் ”அத்தியாவசியமற்ற பயணத்தையும், சந்திப்புகளையும் குறைக்க” புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம்.

சிறைவாசம்” என்ற வார்த்தையை பயன்படுத்தாமல், “நாளை (செவ்வாய்க்கிழமை) நண்பகலில் இருந்து, குறைந்தது 15 நாட்களுக்கு நமது வெளியிட நடமாட்டங்கள், பயணங்கள் வெகுவாகக் குறைக்கப்படும்” என்றார்.

தேவையான பயணங்களில் மட்டுமே ஈடுபட வேண்டும் :

  • பொருட்கள் வாங்க
  • மருத்துவ சிகிச்சைக்காக
  • வீட்டிலிருந்து செய்ய சாத்தியமில்லாத அலுவலக பணிகளுக்கு செல்வதற்காக
  • தனி நபர் உடற்பயிற்சிகளுக்காக

”நண்பர்கள் ஒன்றுகூடல்கள் அல்லது குடும்ப சந்திப்புகள் அனுமதிக்கப்பட மாட்டாது. தேவையற்ற நடமாட்டங்கள், பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளன” என்ற இம்மானுவேல் மக்ரோன் “இந்த விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார். “முக்கியமான மற்றும் துணைச்சாலைகளில்” நிலையான மற்றும் மொபைல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கும். இப்பணிகளில் சுமார் 100,000 காவலர்கள் மற்றும் ஆயுதப்படையினர் (Gendarmerie) ஈடுபடுத்தப்படுவார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி உரையின் சில நிமிடங்களுக்குப் பிறகு பேசிய சுகாதார அமைச்சர் தங்களது அன்றாட தொடர்புகளை ஐந்து பேருக்குள் மட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

ஐரோப்பிய எல்லைகள் ஒரு மாதத்திற்கு மூடப்பட்டுள்ளன

இம்முறை ஐரோப்பிய மட்டத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு பயணக் கட்டுப்பாட்டையும் ஜனாதிபதி முன்வைத்துள்ளார். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் செங்கன் பகுதிக்கான நுழைவாயிலின் எல்லைகள் 30 நாட்களுக்கு மூடப்படுமென்றும், “தற்போது வெளிநாட்டில் உள்ள பிரெஞ்சு மக்கள் பிரான்சுக்கு திரும்ப முடியும். அவர்கள் ‘தூதரகங்கள் மற்றும் துணைத்தூதரகங்களை’ அணுக வேண்டும்.
அதே போல் பிரான்சிலுள்ள ஐரோப்பிய மக்களும் தங்கள் நாடுகளுக்கு திரும்பலாம்” என்றும் கூறியுள்ளார். இங்கிலாந்திற்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், உறுதியாக “அனைத்துப் பயணங்களும் தற்காலிகமாக நிறுத்தப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது சுற்று நகராட்சி தேர்தலை ஒத்திவைத்தல்

மார்ச் 22 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாவது சுற்று நகராட்சித் தேர்தலை ஒத்திவைப்பதையும் ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார். இந்த இரண்டாவது சுற்று தேர்தல் 2020 ஜூன் 21 அன்று நடைபெறலாம்.

அனைத்து சீர்திருத்தங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன (ஓய்வூதியம் உட்பட)

ஓய்வூதியங்கள் உட்பட சீர்திருத்த முயற்சிகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அனைத்து அரசாங்க மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகளும் இப்போது தொற்றுநோயை எதிர்த்துப் போராட வேண்டும்” என்று இம்மானுவேல் மக்ரோன் கூறினார்.

“நகரம் மற்றும் கிராமப்புற மருத்துவமனைகளின் முன்னுரிமைகளின்படி மிகவும் பாதிக்கப்பட்ட 25 மாவட்டங்களுக்கும், பின்னர் அனைத்து பிரதேசங்களிலும் முகமூடிகளும் விநியோகிக்கப்படும்.

வணிகங்களுக்கான உதவி, 300 பில்லியன் யூரோக்கள்

“நான் உங்களை வீட்டிலேயே அமைதியுடன் இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். பொருளாதாரத்திற்கு நம்பிக்கையளிக்கும் விதமாக “எந்தவொரு வணிகமும், அதன் அளவு எதுவாக இருந்தாலும், திவாலாகும் ஆபத்தில் விடப்படாது. வணிகங்களுக்கு  300 பில்லியன் யூரோக்கள் அளவு வரை வங்கி கடன்கள் அளிப்பதாக அவர் உறுதியளித்தார்.

நீர், எரிவாயு மற்றும் மின்சாரத்திற்கான கட்டணங்கள், வரிகள் ஆகியவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

பிரான்சின் முக்கிய இரயில் சேவையான SNCF தொடர்ந்து செயல்பட்டாலும் அதன் சேவையினை கணிசமான அளவு குறைத்துள்ளது.

Related posts

உயரப்போகும் நவிகோ கட்டணம் !

Editorial

பிரான்ஸ் AIA தமிழ் அமைப்பின் தீபாவளி கொண்டாட்டம்!

Editorial

பிரான்சு நகரசபை தேர்தலில் போட்டியிடும் தமிழர்கள் !

Editorial

பிரான்சு தமிழ்ச் சங்கத்தின் 53ஆவது பொங்கல் விழா

Editorial

பிரான்சில் கொல்லப்பட்ட ஆசிரியர் உடல் அடக்கம் : மக்ரோன் அஞ்சலி !

Editorial

பிரான்சில் மீண்டும் வருகிறது ஊரடங்கு!

Editorial

Leave a Comment